இத்தகைய இயற்கைப் பொருளான ஸ்பைருலினாவைக் கொண்டு பற்பல உப பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதைப் பதப்படுத்தி மாவு போல் அரைத்து ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அது போன்று, சேமியா, சுருள்பாசி ஷாம்பூ, சுருள்பாசி சோப்பு, ஃபேஷியல் ஜெல், சுருள்பாசி மாய்சரைசிங், சுருள்பாசி ஜாம் போன்ற பற்பல மதிப்புக் கூட்டப்ட்ட பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
உலகெங்கிலும் நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது. இவை, உணவுக்குறை நிரப்பிகளாகவும், முழு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீலப்பச்சைப்பாசி மாத்திரைகளாகவும், அவலாகவும், பொடியாகவும் கிடைக்கின்றது. இவை மீன் வளர்ப்பிலும், மீன் காட்சியகங்கள், கோழிப் பண்ணைகளிலும் தீவனக் குறைநிரப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இது ஓரளவு உப்பு மற்றும் காரத்தன்மை உடைய நீரில் வளரக்கூடியது. இதற்கு 1927-ம் ஆண்டு ஒரு ஜெர்மனிய அறிஞரால் ஸ்பைருலினா என்று பெயரிடப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 30,000 வகை பாசிகள் உள்ளன. ஆனால் ஸ்பைருலினா பாசி வகையைச் சேர்ந்த புராதன உயிரினம். ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனித உடலில் உள்ள செல்களால் சுலபமாக உறிஞ்சப்படும் நிலையில் உள்ளது.
மற்ற உணவுப் பொருள்களைவிட அதிகப் புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்தப் பாசி உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கும் மிக முக்கியமான உணவாகத் திகழ்கிறது. அதனால், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் இந்தப் பாசியையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மீன் உணவில் புரதச்சத்து அதிகம் இருப்பதற்கு அவை பாசிகளை முக்கிய உணவாகக் கொள்வதே காரணமாகும். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஏற்றது.
கி.பி.1965ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமாலியா மக்களைப் போல மெலிந்து போயினர். இருந்தபோதிலும், சார்டு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் (மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும், அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்கவில்லை; வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்தி ருந்தனர். இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் ஆய்வுமுடிவுப்படி, சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரியவந்தது. அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா. சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக் கிறது.
80% ஆல்கலினும், 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு. பழங்கள், காய்கறிகள், பாசிகள் போன்றவை. 20% அமில உணவு. இறைச்சி, கடல் உணவுகள், கோதுமை போன்றவை. ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.
ஸ்பபைருலினா ஒரு செல் தாவரம். இதில் மிகுந்த புரதச்சத்து உள்ளது. வைட்டமின்-a பி6 பி 12, இரும்புச் சத்து, அமினோ அமிலம், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள், மக்னீசியம், கால்சியம், பொட்டசியம் உள்ளது. நம் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவக sod சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூட்டேஸ் உள்ளது. இது கன்சர் அல்சர் வராமல் தடுக்க உதவுகிறது 100 ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது இதில் புரதம் 65%, கொழுப்பு 5%, கார்போஹைட்ரேட் 20% உள்ளது. மேலும், இதில் காமா-லினோலெனிக் அமிலமும் உள்ளது.
நுண்ணுயிர்களுள் நுண்பாசியான ஸ்பைருலினா ஏறத்தாழ 350 கோடி ஆண்டுகளுக்கு முன்தோன்றியது. நீலப் பச்சைப் பாசியினத்தை சேர்ந்தது. இப்பாசிதான் ஒளிச்சோர்க்கை செய்த முதல் பாசியினம். அதாவது அன்று இருந்த கார்பன்டை ஆக்ஸைடை சிறப்பாகப் பயன்படுத்தி ஆக்சிஜனை எற்பத்தி செய்தது.
உலகில் சுமார் 25 ஆயிரம் பாசியினங்கள் இருக்கின்றன. இவற்றுள் பெரும் பாசிகளும் நுண்பாசிகளும் அடங்கும். சில பாசியினங்கள் உயிரியல் உரமாகப் பயன்படுகிஙனறன வேறு சில மருத்துவ குணம் கொண்டதாகப் பயன்படுகின்றன. ஏறத்தாழ 75 வகையான பாசியினங்கள் ஒப்பற்ற உணவாகப் பயன்படுகின்றன. இவற்றுள் மிக முக்கியமானது ஸ்பைருலினா பிளாட்டென்சிஸ் என்னும் நீலப்பச்சை நுண்பாசி சிறப்பானது.
1984இல் விட்ரெக் மற்றும் நார்சென்ட்ரிக் என்னும் இரு விஞ்ஞானிகள் ஸ்பைருலினாவை உலகிற்கு ஏற்ற ஒப்பற்ற முழுமையான உணவாகப் பரிந்துரைத்தனர். அதைத் தொடர்ந்து பல நாட்டினரும் ஸ்பைருலினாவை வளர்க்கத் தொடங்கினர்.
அதையொட்டி இந்தியாவில் 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் புல்தானியா மாவட்டத்திலுள்ள லோனார் எனும் ஏரியில் ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபட்டனர்.
பாசிகளுள் மிகச் சிறிய உரு செல் பாசி ஸ்பைருலினா. கடற்பாசிகள் பெரியவை. அவற்றில் 150 மீட்டர் நீளம் வரை வளர்பவையும் உண்டு. பாசிகளில் மக்களுக்கும் மீனினங்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவாகுபவையும் உண்டு. மேலும் தரம்குன்றிய சில பாசிகள் பயிர்களுக்கு உரமாவதும் உண்டு. நுண்ணுயிர் தாவர மிதவைகள் இல்லையெனில் உற்பத்தி இல்லை.
நிறங்களின் அடிப்படையில் நுண்பாசிகள் பிரிக்கப்படுகின்றன. 1. நீலப்பாசி-ஸ்பைருலினா. 2. பச்சைப்பாசி-குளோரெல்லா, செனிடெஸ்மஸ். 3. சிவப்புப் பாசி – டுனெலியெல்லா. இவை தவிர பழுப்பு, ஊதா, கருஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களிலும் நுண்பாசிகள் உண்டு.
பாசியினங்களுள் முன்தோன்றியவையும் மிகப் பழமையானவையும் நீலப்பச்சைப் பாசிகளே. ஸ்பைருலினா ஏறத்தாழ 30 ஆண்டுகளாக மக்கள் உண்டு வருகின்றனர். நச்சு ஆபத்தில்லாதது. ஸ்பைருலினா வளர்ப்பதற்கான நிலப்பரப்பு சற்று மேடானதாகவும் திறந்தவெளியாகவும் இருக்கவேண்டும். வேகமான காற்றில் இலைகளும் தழைகளும் விழாத இடமாக இருக்கவேண்டும். வளர்ப்பிடத்தின் அருகே சிதைந்த சாக்கடையோ, தொழிற்சாலை ரசாயனக் கழிவுகளோ இருக்கக்கூடாது. ஸ்பைருலினா வளர்ப்புக்கு நீர் அதிகம் தேவையில்லை. குறைந்த அளவு நீரே போதுமானது. ஆனால் நீர் சுத்தமானதாகவும் வேண்டாத உயிரினங்கள் இல்லாததாகவும் இருக்கவேண்டும். ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து பெறப்படும் நீர் மிகவும் சிறப்பானது. ஸ்பைருலினா பெருநகரங்களில் வீட்டு மொட்டை மாடிகளிலும் பால்கனிகளிலும் வளர்க்கலாம்.
குளிரான பகுதிகளிலும் வெயில் குறைவான இடங்களிலும் இதனை வளர்ப்பது கடினம். சூரிய வெப்பம் 27 செல்லியசு முதல் 37 செல்சியஸ் வரை இருக்கவேண்டும்.
ஆரோக்கியமானதாகவும் திடமுள்ளதாகவும் வளமானதாகவும் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளதாகவும் எவ்வித நோய்க்கிருமிகளும் ஒருவகைக் கலப்பினமும் இல்லாமல் சிறிய அளவில் வளர்க்கப்படும் ஸ்பைருலினாவுக்குத் தாய்ப்பாசி (வித்து) என்று பெயர். இதை வைத்துத்தான் சுருள்பாசி பெருக்கம் அடைகிறது. தாய்ப்பாசியை வளர்க்க வேண்டிய இடம் தூசிகள் இல்லாமல் சுத்தமானதாகவும் சமதளம் உடையதாகவும் மரங்கள் மற்றும் செடிகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். இதற்கு நேரடியான வெயில் தேவையில்லை. சற்று லேசான வெயில் இருந்தால் போதும். ஸ்பைருலினா வளர்ப்புத் தொட்டிகளிலிருந்து தாய்ப்பாசி வளர்க்குமிடம் 5 மீட்டர் இடைவெளி தூரத்தில் இருக்கவேண்டும்.
ஸ்பைருலினாவின் வளர்ப்புக்கு உகநத ஊட்டச்சத்துகளின் கலவையானது ஸரோகஸ் சூத்திரம் எனப்படும். இதில் ஒரு லிட்டர் நீரில் இடம்பெறும் ஊட்டச்சத்துகள் வருமாறு 1. சோடியம் பைகார்பனேட் 8 கிராம், 2. சோடியம் குளோரைட் 5 கிராம், 3. யூரியா 0.2 கிராம், 4. பொட்டாசியம் சல்பேட் 0.5 கிராம், 5. மக்னீசியம் சல்பேட் 0.16 கிராம், 6. பாஸ்பாரிக் அமிலம் 0.052 மி.லி., 7. ஃபெரஸ் ச்ல்பேட் கரைசல் 0.05 மி.லி.
தொட்டிகளுக்கு ஏற்ற அளவில் ஊட்டச்சத்துகளை மேற்குறிப்பிட்ட அளவுகளில் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து தொட்டியில் ஏற்கனவே நிரப்பியுள்ள நீரில் ஊற்றி பின்னர் தொட்டி முழுவதும் ஊட்டச்சத்துகள் கலந்து விடுமாறு நன்கு கலக்கிவிட வேண்டும். இதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வளர்ப்புக்கான ஸ்பைருலினாவை தாய்ப்பாசித் தொட்டிகளிலிருந்து சேகரித்து தொட்டியின் பல பகுதிகளிலும் இருப்புச் செய்து அவை தொட்டி நீர் முழுவதும் பரவலாக இடம் பெறுமாறு கலக்கிவிட வேண்டும். ஸ்பைருலினாவை இருப்புச் செய்தபின் அன்றாடம் செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகளைச் செய்து அவற்றை வளரவிட வேண்டும். வளர்ச்சி மற்றும் மேலாண்மைத் திறனைப் பொறுத்து அவற்றை 7 முதல் 10 நாட்களில் அறுவடை செய்யலாம். சூழ்நிலைக் காரணங்களைப் பொறுத்து ஸ்பைருலினா வளர்ப்புக் காலமும் மாறுபடும்.
ஸ்பைருலினா வளர்ப்புத் தொட்டியில் நீரின் ஆழம் 20 செ.மீ. முதல் 23 செ.மீ. வரை இருப்பது நல்லது. அதிக வெப்ப காலங்களில் 23 செ.மீ. வரையிலும் மழைக்காலங்களில் 20 செ.மீ. வரையும் ஆழம் இருக்குமாறு பராமரிப்பது சிறந்தது. ஸ்பைருலினாவைப் பராமரிக்கும் முறைகள், அறுவடை முறைகள், பதப்படுத்தலும் பாதுகாத்தலும், வளர்ப்புப் பொருளாதாரம், ஸ்பைருலினா பயன்படுத்தும் முறை போன்ற பல முறைகள் சுருள்பாசி வளர்ப்புப் பயிற்சியில் உள்ளன.
சுருள் நீலப் பச்சைப்பாசி மனிதன் தோன்றுவதற்கு ஏறத்தாழ 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நுண்ணுயிரி. சூரிய ஒளியின் மூலம் ஒளித்தொகுப்பு செய்து உணவுத் தயாரித்து வாழ்ந்த தாவரங்களில் ஸ்பைருலினாவும் ஒன்று.
ஸ்பைருலினா செல்லில் சிலியா கிடையாது. அதனால் நீந்திச் செல்ல இயலாது. ஆனால் மிதக்கத்தக்கது. நீரின் மூலமும் ஃபிளமிங்கோ என்னும் பறவை மூலமும் ஸ்பைருலினாவின் பரவல் நடைபெறுகின்றது. ஃபிளமிங்கோ பறவை ஸ்பைருலினா வளர்கின்ற நீரை அதிகமாக விரும்பி அங்கு சென்று பருகுகின்றன. அப்போது அதன் கால்களிடையே ஸ்பைருலினா பாசி ஒட்டிக்கொண்டு மற்ற நீர்நிலைகளுக்கும் பரவுகின்றன.
ஸ்பைருலினா வளர்ப்பிலும் உற்பத்தியிலும் சீனா முதலிடம் வகிக்கிறது. தொழிற்சாலைகள் மூலம் 1090ல் சீனா ஸ்பைருலினா வளர்ப்பைத் தொடங்கியது. இன்று சுமார் 100 ஸ்பைருலினா உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. உலகில் மிகப் பெரிய அளவிலும தீவிர முறையிலும் ஸ்பைருலினாவை வளர்க்கும் பண்ணைகள் அமெரிக்காவில் உள்ளன. தாய்லாந்து, சிலி, பல்கேரியா, வியட்நாம், கியூபா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் ஸ்பைருலினா வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
1970ல் முருகப்பா ஆராய்ச்சிக் குழுவினர் நுண்பாசிகள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்தனர் இவற்றில் ஸபைருலினாவும் ஒன்று.1973ல் மைசூரில் உள்ள மத்திய உணவு நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வெற்றிகண்டது. இதனைத் தொடர்ந்து பல தொண்டு நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபட்டன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் நத்தம் கிராமத்தில் ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகமும் மதுரையில் உள்ள ஆன்டேனா அறக்கட்டளையும் மற்றும் பிற நிறுவனங்களும் ஸ்பைருலினா வளர்ப்பில் முன்னணியில் உள்ளன.
இதை வீட்டுப்பெண்கள் கற்று வியாபரம் செய்யலாம். இளைஞர்கள் முழுநேரப் பணியாகவும் செய்யலாம். இதை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏற்றுமதி வியாபாரம் செய்யலாம்.
ஸ்பைருலினா வளர்ப்புப் பயிற்சியில் 10 ஆண்டு அனுபவம் பெற்ற ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் மக்களுக்கும் சிறந்த பயிற்சியை வழங்கி வருகிறார்கள். மூன்று நாள் பயிற்சிக்கு தஙகும் வசதி, உணவோடு ரூ. 6500 கட்டணம் வசூலிக்கிறார்கள்.
தொடர்புக்கு ரத்தினராஜசிங்கம் 9884000413.

No comments:
Post a Comment