
பண்டைய
காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி
பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று
என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ?
மாவீரன்
மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம்
கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி
தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில்
மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை
தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.
சாம்பிராணி
ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை
சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து
வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில்
எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த
மணத்தை பரப்பும்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense)
மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில்
குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக
காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன்
மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது
உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள்
தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல்
ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு
ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்
சாம்பிராணி மருத்துவ பயன்கள்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense)
மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான்
கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது
இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை
போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
சாம்பிராணியை
ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை
எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி
எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது

No comments:
Post a Comment